சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பினை செப்டெம்பர் 08 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எடுத்துள்ளது.