பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல, பொது பாதுகாப்பு அமைச்சரினால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அவர் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை.
குறிப்பிட்ட காலத்திற்குள் பாதாள உலக செயற்பாடுகளை அமைச்சரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என்றார்.