இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) உலகில் முதன்முறையாக புற்றுநோயாளிகளுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது சிகிச்சை காலத்தை சுமார் 75% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கு அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அட்ஸோலிசுமாப் நோயெதிர்ப்பு சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகளுக்கு இந்த புதிய தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
நோயாளியின் சார்பில் மருத்துவக் குழுக்கள் செலவிடும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.