Thursday, December 25, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்தென்னாபிரிக்க கட்டடமொன்றில் தீ விபத்து: 73 பர் பலி

தென்னாபிரிக்க கட்டடமொன்றில் தீ விபத்து: 73 பர் பலி

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்ததுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடத்திலேயே வியாழக்கிழமை (31) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் தீ விபத்துக்கான தெளிவான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த அனர்த்தத்தில் குறித்த கட்டிடம் முற்றாக தீக்கிரையாகிவிட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜோகன்னஸ்பர்க் நகர அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles