Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசினொபெக்கின் முதல் எரிபொருள் நிலையம் திறக்கப்பட்டது

சினொபெக்கின் முதல் எரிபொருள் நிலையம் திறக்கப்பட்டது

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக இணைந்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொட்டாவ மத்தேகொடவில் நேற்று திறந்து வைத்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளுர் முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் சினோபெக் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், 150 எரிபொருள் நிலையங்கள் சினோபெக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாகவும், 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles