Monday, August 4, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்க தீர்மானம்

பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்க தீர்மானம்

ஒக்டோபர் 15ம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிடுவது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய எல் நினோ நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மழைக்காலத்துக்கு பின்னர் மீண்டும் வறட்சியான காலநிலை ஏற்படக் கூடும் என்பதால், மழை நீரை விரயமாக்காமல் உரிய முறையில் நீரை முகாமைத்துவம் செய்ய வேண்டுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles