எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு உதவுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா முன்வைத்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு உதவுமாறு அதிகாரிகளின் கோரியதை அடுத்து, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.