Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்கிரீஸில் படகு கவிழ்ந்ததில் நால்வர் பலி

கிரீஸில் படகு கவிழ்ந்ததில் நால்வர் பலி

கிரீஸ் தீவான லெஸ்போஸ் பகுதியில் படகு கவிழ்ந்ததில் நான்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 18 பேர் மீட்கப்பட்டதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளானவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து வெளியேறும் பலருக்கு ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு கிரீஸ் வசதியாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடல் மற்றும் தரை வழியாக கிரீஸை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles