Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்வைன் உற்பத்தியாளர்களுக்காக 1700 கோடி ரூபா செலவிடும் பிரான்ஸ் அரசாங்கம்

வைன் உற்பத்தியாளர்களுக்காக 1700 கோடி ரூபா செலவிடும் பிரான்ஸ் அரசாங்கம்

ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்திற்கான ஒரு தரவை வெளியிட்டது.

இதன்படி வைன் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவீதம், ஸ்பெயினில் 10 சதவீதம், பிரான்ஸில் 15 சதவீதம், ஜேர்மனியில் 22 சதவீதம் மற்றும் போர்ச்சுகலில் 34 சதவீதம் என சரிவின் சதவீதம் உள்ளது. அதே சமயத்தில், உலகின் மிக பெரிய வைன் தயாரிப்பாளர்களான ஐரோப்பிய ஒன்றியத்தில் வைன் உற்பத்தி 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சில வருடங்களாகவே மக்களின் வாங்கும் சக்தி பொருளாதார காரணங்களால் குறைந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் தொழிற்சாலை சாராத வழியில் தயாரிக்கப்படும் பீர் மதுபானத்தை விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர்.

இதனால் “அதிக உற்பத்தி ஆனால் குறைவான விற்பனை” எனும் நிலை தோன்றி வைன் வியாபாரம் சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அதிகப்படியாக உற்பத்தியாகி உள்ள வைன் மதுபானத்தை அழிக்கவும், அதே சமயம் வைன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பிரான்ஸ் அரசாங்கம் சுமார் ரூ.1782 கோடி (200 மில்லியன் யூரோ) செலவிடுகிறது.

அதிக வைன் பானங்களையும், கைகளை சுத்தம் செய்ய உதவும் சானிடைசர், சுத்திகரிப்பு பொருட்கள், நறுமண பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் வகைகளை அரசாங்கம் வாங்கி கொள்வதற்கும், வைன் உற்பத்தியாளர்களை ஆலிவ் போன்ற மாற்று விவசாய உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles