Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் நாடு திரும்பும் இலங்கையின் வரலாற்று பொக்கிஷங்கள்

மீண்டும் நாடு திரும்பும் இலங்கையின் வரலாற்று பொக்கிஷங்கள்

கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் இன்று (28) குறித்த இரண்டு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

1765 ஆம் ஆண்டில், கண்டியில் உள்ள அரச மாளிகையை கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் அங்கிருந்து வரலாற்று பெறுமதி மிக்க பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த அறிஞர்கள் குழு நடத்திய ஆய்வின்படி, நெதர்லாந்தில் உள்ள ரிஜ்க்ஸ் (RIJKS) நூதனசாலையில் இலங்கைக்கு உரித்தான புகழ்பெற்ற லெவ்கே திசாவா பீரங்கி, இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி துண்டுகள், கத்திகள், இரண்டு துப்பாக்கிகள் என்பன காணப்படுவதாக தெரியவந்திருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles