ஹட்டன் பேருந்து தரிப்பிடம் தூய்மையாக இல்லை என எழுந்த முறைப்பாடுகள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தற்போது ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பேருந்து தரிப்பிடமானது மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.
தற்போது திருத்தப்பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் தற்காலிகமாக பேருந்து தரிப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், ஹட்டன் பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஒஸ்போன் , நோட்டன், காசல்ரீ, சாஞ்சிமலை, ஓல்டன், போடைஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹட்டனிலிருந்து- கொழும்பு – கண்டி – தலவாக்கலை- வட்டவளை- நாவலப்பிட்டி- நுவரெலியா-உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் –அரச பேருந்துகள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.