Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாய்களின் உண்ணிகள் காரணமாக பாடசாலையொன்றுக்கு பூட்டு

நாய்களின் உண்ணிகள் காரணமாக பாடசாலையொன்றுக்கு பூட்டு

நாய்களின் உண்ணிகள் காரணமாக பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது.

பாடசாலை மைதானத்தில் நாய் உண்ணிகள் மற்றும் சிறிய மணல் உண்ணிகள் அதிகளவில் காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான மருந்துகளுடன் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு பாடசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles