அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (28) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொருளாதார மீட்சிக்கான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஊழியர் சேம நிதியம் (EPF) மற்றும் ஊழியர்களின் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.