கட்டுநாயக்க, இரத்மலானை, மத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வான் பரப்பில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பட்டம் பறக்கவிடப்படுவதால் விமான போக்குவரத்துக்கும், அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை பொருட்படுத்தாமல் யாரேனும் ஒருவர் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந் நிறுவனம் எச்சரித்துள்ளது.