ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் ஹொரணையில் உள்ள கோணபொல நிகழ்வு மண்டபத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் திருமண வைபவம் ஒன்றிற்கு வேறு நபர்களுடன் சென்றுள்ளதுடன், அங்கிருந்த குழுவினருடன் நடனமாடியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் மேலும் இரு யுவதியுடன் நடனமாடிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹொரணையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் அறிவுறுத்தியதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
யுவதியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், யுவதியின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகும், அவர் உண்ட உணவு சுவாச பாதைக்குள் நுழைந்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக ஹொரண ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சுமேதா குணவர்தன தீர்மானித்துள்ளார்.
ஹொரணை ஆதார வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் பணித்த செனவிரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.