Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம்

கைப்பேசி பாவனையால் சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம்

கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார்.

குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளி போட்டி விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.

இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர்.

இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும்.

ஆகையினால் குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ரூமி ரூபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles