Wednesday, November 12, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச்சூடு

ஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச்சூடு

குளியாபிட்டிய – ஹெட்டிபொல வீதியின் குருதுகும்புர சந்தியில் நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.45 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் படுகாயமடைந்து குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூனமல்தெனிய – அகரவத்தை பகுதியைச் சேர்ந்த ‘கொண்டயா’ என அழைக்கப்படும் சந்தன செனரத் ஜயக்கொடி என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் ஹெட்டிபொல – வஸ்வத்த பிரதேசத்தில் தங்கும் விடுதியொன்றை நடத்தி வருவதாகவும் அவர் பலருடனம் தகாத உறவுகளை பேணி வருவதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles