நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.