இலங்கை கிரிக்கெட் தேசிய அணி வீரர்கள் இன்று காலை லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு (LRH) விஜயம் செய்து மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு’ ஆதரவளித்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இதய-தொராசிக் வார்ட் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இலங்கை கிரிக்கெட் தேசிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் இந்த விஜயத்தில் பங்கேற்றது.
லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தின் தற்போதைய பணிகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளால் வீரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமீபத்தில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு’ 100 மில்லியன் ரூபாவை வழங்கியது.