எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக பௌசர் உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.
எரிபொருள் பௌசர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (21) முதல் எரிபொருள் பௌசர்ளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைப் போல் இடம்பெறும் என தெரிவிக்கபடுகிறது.