மகா பருவம் வரை போதியளவு அரிசி இருப்பு உள்ளதால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
‘விவசாயத் துறையின் நவீனமயமாக்கலும் அதன் சவால்களும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வருட மகா பருவத்தில் பயிர்ச்செய்கைக்கு இலக்கான 8 இலட்சம் ஹெக்டேயர் நிலத்தில் 6 இலட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேயர் அறுவடை செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.