Wednesday, November 20, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவிடமிருந்து 11 அதிநவீன இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு

சீனாவிடமிருந்து 11 அதிநவீன இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு

இலங்கை இராணுவம், சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிலிருந்து 11 கடற்படை வாகனங்களை பெற்றுள்ளது.

6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை நேற்று (22) இராணுவத் தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் இராணுவ நோக்கங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு உதவியாளர் சிரேஷ்ட கர்னல் சோவ் போவிடம் இருந்து இராணுவத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பாதுகாப்பு அமைச்சர் தென்னகோன் அதனை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கையளித்தார்.

இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சீன தூதரக அதிகாரிகளுடன் வாகனங்களை சோதனையிட்டனர்

இலங்கை இராணுவம் எதிர்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்காக இந்த இராணுவ வாகனங்களை பயன்படுத்த உத்தேசித்துள்ளது.

இந்நிகழ்வின் இறுதிக்கட்ட நிகழ்வாக, பாதுகாப்பு அமைச்சர் தென்னகோன் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும், நிகழ்வின் அடையாளமாகவும், இலங்கை இராணுவத்தின் சார்பாக சீன டிஏ சிரேஷ்ட கேணல் போவுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles