அரசியல்வாதிகள் அல்லது சட்டத்தை கையில் எடுக்கும் எந்தவொரு நபருக்கும் அவர்களின் தரம் எதுவாக இருந்தாலும் சட்டம் கடுமையாகப் பயன்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களைத் தூண்டும் வகையில் பொறுப்பற்ற முறையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்காப்புக்காக வன்முறைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், அரசாங்கமும் சட்டமும் எம்மை பாதுகாக்காது போனால் அது எமது உரிமை எனவும் மக்கள் பிரதிநிதி அன்றைய தினம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆளாகாமல் சட்டத்தை கையில் எடுக்காது செயற்படுமாறு மலையக உட்பட முழு மக்களையும் பொது பாதுகாப்பு அமைச்சர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.