பாடசாலை கட்டமைப்பில் 45,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய எதிர்பார்த்த மாணவர்கள் சுமார் 5 வருடங்களாக கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு மாணவர்கள் உள்ளீர்க்கப்படவில்லை என அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த கொவிட் பருவத்தில், பல ஆசிரியர் கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
அதன் பயன்பாட்டிற்குப் பின்னர் அங்கிருந்த மெத்தைகள் மற்றும் தலையணைகள் அழிக்கப்பட்டதால் அவர்களின் பல வளங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.