2023 இன் முதல் ஆறு மாதங்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரி வருவாய் இலக்கினை அடைவதற்கு இலங்கை தவறியுள்ளது.
இலங்கைக்கான வரி வருவாய் இலக்கான 1,300 பில்லியன் ரூபாவில் இலங்கை 92% இலக்கை மாத்திரம் அடைய முடிந்தது என மத்திய வங்கியின் தரவு வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய வாராந்த அறிக்கையின்படி,
இலங்கையின் மொத்த வருமானம் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,317.05 பில்லியன் ரூபாவாகவும்.
இதில் 1,198.85 பில்லியன் ரூபா வரி வருவாய் ஆகும்.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் அறிக்கையானது, மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய் 2023 முதல் ஆறு மாதங்களுக்கு 1,300 பில்லியன் ரூபா மற்றும் 2023 இறுதிக்குள் 2,940 பில்லியன் ரூபா என்றும் மதிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.