Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி தடைகளை தொடர்ந்தும் பேண முடியாது - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி தடைகளை தொடர்ந்தும் பேண முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச வர்த்தகத்திற்கு நாடு திறக்கப்பட வேண்டும் எனவே இறக்குமதி தடைகளை தொடர்ந்தும் பேண முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் 3,000 HS குறியீடுகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்ட போதிலும், இறக்குமதியை நிரந்தரமாக தடை செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடுமையான மேற்பார்வையின் கீழ் எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் .நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் பெரும்பாலான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய மதிப்பாய்வுக்கு முன்னதாக மீதமுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles