GSP+ வரிச்சலுகையை இலங்கை இழந்தால் அதன் பிராந்திய நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகளாவிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இலங்கை தமது முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவையையும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இலங்கையை முக்கிய சந்தைகளில் ஒருங்கிணைப்பது ஜிஎஸ்பி பிளஸ் என்றும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணிப்பது நாட்டை குறிப்பிடத்தக்க பாதகத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும் தூதுவர் டெனிஸ் சைபி சுட்டிக்காட்டியுள்ளார்.