Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது

பதுளையில் ஐஸுடன் ஒருவர் கைது

பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை வீரியபுர பகுதியில் உள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 65 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

அத்தோடு 56 வயதுடைய வீரியபுர பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் விசேட அதிரடிப் படையினர் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles