Saturday, July 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவறட்சியான காலநிலை: 190,000 பேர் பாதிப்பு

வறட்சியான காலநிலை: 190,000 பேர் பாதிப்பு

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்கள் மற்றும் 52 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, அந்தப் பகுதிகளில் 54,979 குடும்பங்களைச் சேர்ந்த 183,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் மாத்திரம் 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 70,238 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles