மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றப்பட வேண்டும் என்றார்.