செய்திகள்உலகம்ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் 60 பேர் சடலமாக மீட்பு

ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் 60 பேர் சடலமாக மீட்பு

மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலில் சுமார் நூறு புலம்பெயர்ந்தோர் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குறித்த கப்பல் கடலில் பயணித்துள்ளதுடன், அண்மையில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

கப்பலில் இருந்த 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செனகல் மற்றும் சியரா லியோனை சேர்ந்தவர்கள் குறித்த கப்பலில் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles