Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை இந்த ஆண்டு முதல் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாற்றுத்திறனாளிகளின் கல்வி உதவித் தொகை 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாவாகவும், சுயதொழில் உதவித் தொகை 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்காக வழங்கப்பட்ட 15,000 ரூபா உதவித் தொகை 35,000 ரூபாவாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 250,000 ரூபா உதவித் தொகை 5 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை சீரமைக்க வழங்கப்பட்ட 150,000 ரூபா உதவித் தொகை 250,000 ரூபாவாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூடம் அமைக்க வழங்கப்படும் உதவித் தொகை 100,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles