மனித உடலின் 432 உள்ளுறுப்புகளை 04 நிமிடங்களில் அடையாளம் கண்ட 8 வயது சிறுமியொருவர் உலகிலேயே அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தையாக சோழன் உலக சாதனை புத்தகத்தில் இணைந்துள்ளார்.
ஹோலி ரொசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சங்கரதாஸ் கனிஷ்கா என்ற மாணவியே இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.
பொகவந்தலாவ, ஆரியபுர கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, ஹோலி ரொசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
சிறுமிக்கு முன்பள்ளி வயதிலிருந்தே நல்ல நினைவாற்றல் இருப்பதை அவளது பெற்றோர் உணர்ந்திருந்தனர்.
அதன்படி,சிறுமியின் பெற்றோர் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததன் பேரில், மேற்படி நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் நாகவாணி ராஜா அதனை மேற்பார்வையிட்டார்.



