பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணை கோரி தாக்கல் செய்த 9 மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவருக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பிணை கோரிக்கைகளை நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.