துறைமுகத்துக்கும், துறைமுகத்தில் இருந்தும் பொருட்களை நகர்த்தும் கொள்கலன் வண்டிகளின் கட்டணம் 65% உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை கொள்கலன் வண்டிகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள், உதிரிப்பாகங்களின் விலையேறத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, பொருட்களின் விலைகள் மேலும் உயரலாம் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.