அரசாங்க ஊழியர்கள் விடுமுறை அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்லும்போது அரசாங்கமே சில தடைகளை ஏற்படுத்துவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கான வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்குவதில்லை என அரசாங்கம் ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஆசிரியர்கள் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சுமார் 5,000 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு பணி நிமித்தம் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.