Wednesday, December 17, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது

15 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது

15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுமியை குறித்த இளைஞன் கடத்திச் சென்றதையடுத்து, இது தொடர்பில் எதுவுமே அறியாத சிறுமியின் பெற்றோர்கள், தமது சிறுமியை காணவில்லை என முல்லைத்தீவு – விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சிறுமியை கடத்திய இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரால் சிறுமி கடத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவு கல்லாபட்டான் பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்திய இளைஞனை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles