யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் ஆணொருவரின் சடலம் காயங்களுடன் அண்மையில் மீட்கப்பட்டது.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பகுதிகளைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ் விஷேட குற்றதடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.