யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் நேற்றிரவு (13) ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதானால் குறித்த சிறுமியின் தாய் உட்பட குடும்பத்தினரால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.