சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கான “போதுமான உத்தரவாதங்கள்” தேவைப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கடனுக்கான தெரிவுகள் மற்றும் கொள்கைத் திட்டங்களை நேற்று இலங்கை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்தார்.
“இலங்கையின் கடுமையான கொடுப்பனவுச் சிக்கல்களைத் தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் கூடிய விரைவில் பொருளாதாரத்தை ஒரு நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.