ரஷ்யாவில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துடன் (SLFEA) இணைந்து இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு மேலும் 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.