பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் ஹவந்தாவ பதுலு ஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்தில் அல்லது காட்டு யானை தாக்கி குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.