மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகர பக்டீரியாவை பிரிட்டிஷ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
லெஜியோனெல்லா என்று பெயரிடப்பட்ட இந்த வகை பக்டீரியா குளங்கள் மற்றும் ஆறுகளில் செழித்து வளரும் என்று கூறப்படுகிது.
அதன்படி இந்த வகை பாக்டீரியாக்கள் அடங்கிய சிறு நீர்த்துளிகளை சுவாசித்தால் அவர்களுக்கு கடுமையான நியுமோனியா ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் குணப்படுத்த முடியும் என்றாலும், இது நுரையீரல் செயலிழப்பிற்கும் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.