பணத்திற்காக தனது 14 வயது மகளை விற்ற சிறுமியின் தாய் மற்றும் சந்தேகநபர்கள் இருவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரின் தாயார் திவுலபிட்டிய, வெலகன பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஆவார்.
மற்றைய இரு சந்தேகநபர்கள் திவுலபிட்டிய உல்லலபொல பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் மற்றும் மினுவாங்கொடை நில்பனாகொட பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர்.