வீடுகள் அல்லது பணியிடங்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.
சுத்திகரிப்புக்காக நீர் பெறும் ஆதாரங்களில் நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வறட்சியான காலநிலையினால் 20 நீர் விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் 41 நீர் வழங்கல் கட்டமைப்புகளின் நீர் விநியோகம் குறையக் கூடிய சூழ்நிலை நிலவுகிறதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.