ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 09ஆம் திகதி இரவு ஏறாவூர் நகரில் வீதியொன்றில் நடந்து சென்ற நபரொருவரை அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் கைதுசெய்து சந்தேகநபர்கள் மூவரும் அவரிடம் இருந்து 6500 ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க மூவரும் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டதாக அந்த நபர் மட்டக்களப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவித்தார்.
ஏறாவூர் பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.