Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனங்களை மீட்டுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது

வாகனங்களை மீட்டுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலுள்ள கார்களை மீட்டுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க நேற்று மாலை இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அருக்கொட, அலோபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

விசாரணையில் மேற்படி சந்தேக நபர் ஒருவருக்கு TOYOTA AXIO ரக காரை ரூ.3,911,000 ரூபாவுக்கு மீட்டுத் தருவதாகவும், மற்றொரு நபர் ரூ.1,000,000 ரூபாவுக்கு ஒரே மாதிரியான இரண்டு கார்களை மீட்டுத் தருவதாக கூறி, 1,360,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

கைதான சந்தேக நபர் தொடர்பில் இவ்வாறான பல மோசடி முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ள நிலையில், அவர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles