அரசாங்கத்தின் கடன் வரம்பு 4,979 பில்லியன் ரூபாவில் இருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்ட ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறாயினும், பந்தயம் மற்றும் சூதாட்ட வரி திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாததால், சபை நடவடிக்கை நான்கு முறை தடைப்பட்டது.