Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகர்ப்பிணி யானை சுட்டுக்கொலை

கர்ப்பிணி யானை சுட்டுக்கொலை

பலுகஸ்வெவ – பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் சடலத்தை வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

25 வயது கர்ப்பமான யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய ஏழரை அடி உயரமுள்ள குறித்த யானை விரைவில் பிரசவிக்க இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ரத்மல்கந்த மற்றும் ரிதிகல காப்புக்காடுகளில் வழமையாக சுற்றித்திரியும் யானைக் கூட்டத்திலிருந்து பெண் யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருவுற்ற யானையின் வயிற்றில் நன்கு வளர்ந்த 18 மாத கரு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும்,இந்த கர்ப்பிணி யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேவல்பொல வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் ஆரம்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles