Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை மீனவர்கள் மூவர் தமிழகத்தில் கைது

இலங்கை மீனவர்கள் மூவர் தமிழகத்தில் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை அருகே மூன்று இலங்கை மீனவர்கள் தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுவால் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களையும் தமிழக கடலோரக் காவல் துறையினர் முதலில் மீட்டு பின்னர் கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரொனால்ட் ரேகன் (40), சிவக்குமார் (25) மற்றும் ஸ்ரீகாந்தன் (37) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

இவர்கள் மூவரும் கடந்த 6 ஆம் திகதி பதிவு செய்யப்படாத இயந்திரப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர்.

இந்நிலையில் கடலில் வழக்கமான ரோந்துப் பணியின் போது, ​​மணியந்தீவில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் தமிழக கடலோர காவல் படை அவர்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles